|
|
||||||||||||||||
![]() |
|
|
|
|
||||||||||||
ஆக்கம் பேசாலைதாஸ்கல்வியும் ஒழுக்கமும் எம் இருகண்கள் இந்த வாக்கியம் பேசாலைமக்களின் வாழ்விலே ஒன்றித்துப்போன ஓர் வார்த்தை குறிப்பாக பேசாலை மகாவித்தியலத்திலே கல்வி பயின்ற அத்தனை மாணவர்களுக்கும் இதயத்திலே நிலைத்து நிற் கும் வார்த்தை என நான் நினைக்கின்றேன். இந்த விருதுவாக்கிய த்தை யார்த்தவர் யாரென்று என் சிறுமதிக்குத்தெரியாது! ஆனாலும் இந்த விருதுவாக்கியத் தை என் சிறுபராயம் தொட்டு என் இதயத் திலே விதையாக நட்டு வைத்தவர் என் மானசீக ஆசானாகிய அமரர் திரு துரம் மாஸ்டர் அவர்களே! துள்ளித்திரியும் வயசிலே துடுக்கட க்கி பிள்ளைகளை பள்ளியிலே பயிலவைத்த பண்பான ஒரு ஆசான் அவர்! கடற்கரையெல்லாம் தேடிச்சென்று பிள்ளைகளை பள்ளிக்கூட த்திற்கு கொண்டுவரும் பாணியே பெரும் கதை. அன்னாருக்கு பெயர் சொல்ல ஓர் பிள்ளை இல்லை! ஆனால் அவரின் பெயரைச்சொல்லாத பிள்ளைகளே பேசாலையில் இல்லை! பேசாலையை தேடிவந்தது மத்திய மகாவித் தியாலயம் எனும் அரிய சந்தர்ப்பம்! பெண்பிள்ளைகளும் ஆண்பிள் ளைகளும் கலந்து படித்தால் பண்பாடு சீர்குழைந்துபோகும் என்று எண்ணி அந்த சந்தர்ப்பத்தை கைநழுவவிட்டவர்கள் பேசாலைமக்கள்! மக்களின் மடமைத்தனத்தை மக்களுக்கு எடுத்துக்கூறி பல எதிர்ப்புக ளுக்கு மத்தியிலே மகாவித்தியாலத்தை பேசாலையில் தோற்றி வித்த பெருமை அன்னார் அமரர் திரு துரம் மாஸ்டர் அவர்களையே சாரும்! அதற்கு பக்கபலமாக இருந்தவர் முஸ்லீம் சகோதரமாகிய ஆசிரியர் திரு முகுத்தார் அவர்கள்! இந்த இருவரும் உத்தியோகப் பற்றற்ற நிலையில் உயர்தர கல்வியை ஆரம்பித்து ஆசிரியை திருமதி செ.அஸம்ரா. பீரிஸ் அவர்களை பேராதனைப்பல்கலைக்கழக த்திற்கு முதன்முதலாக பேசாலையில் இருந்து அனுப்பிவைத்ததே பெரும் சாதனையாக கொள்ளவேண்டும்! எண் கணிதபாடத்திலே துரம் மாஸ்டர் மகா விண்ணன்! எந்தப்பெரிய கடிணமான கணக்காக இருந்தாலும் ஒரு நொடிக்குள் விடைகானும் வித்தகர்! தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம்மிக்கவர். இவர் தலைமை ஆசிரியராக இருந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து மாவட்டரீதிலான விளையாட்டுப்போட்டி கலை இலக்கியப்போட்டிகளிலே எமது பாடசாலை சாதனைகள் படைத்ததுண்டு! நாராய் நாராய் செங்கால் நாராய் என்ற சத்திமுற்று புலவரின் பாடலை தமிழ்த்தின விழாப்போட்டிக்காக எமமக்கு அவர் பழக்கிய விதத்தினை மறக்கமுடியுமா? எமது பாடசாலையின் கட்டிடவளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்புகளை அன்னார் ஆற்றியுள்ளார்! மத்திய மைதானத்தை ஊறவர்களின் சிரமதானத்தின் மூலம் களிமண் இட்டு செம்மைப்படுத்திய அந்த செழுமையான நினைவு இன்னமும் நினைவில் நிழலாடுகின்றது! இப்படியான பல இனிய சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!
ஆசிரியரின் தனிமனித வாழ்விலே சில குறைகள் இருக்கலாம்! தனது சொந்த உறவுகளுடன் சுமூகமான உறவு நிலை இல்லாமல் இருக்கலாம் அதற்கான காரணம் யாம றியோம். தனது அந்திமகாலத்திலே தனது பூர்வீக சொத்துக்களை யாரோ ஒருவருக்கு எழுதிவைத்த சூட்சுமம் ஏன் என்று புரிய வில்லை! ஒரு நேர்மையான கண்ணியமான மனிதர் என்று பெயர் எடுத்த மாமனிதன் தனது சொத்துக்களை தான் உயிராக நேசித்த பள்ளிக்கூட்த்திற்கோ அல்லது வெற்றித்தாய் மீது பாசம்கொண்ட மகன் அவளுக்காகவாவது கொடுத்திருக்கலாம் எதுவுமே இல்லாமல் எவனோ ஒருவனுக்கு எழுதிவைத்தது பெரும் மடமையே! அன்னா ரின் தவறை உணர்ந்து அவர் மீதுள்ள கறை போக்க சொத்துக்களை பெற்றுக்கொண்டவர் செயல்படுவாரா? என்னதான் நடந்திருந்தாலும் நமது அறிவுலக அப்பாவை நாம் என்றுமே மறக்கக்கூடாது. நன்றி. |
|
|||||||||||||||
|
||||||||||||||||
|
|
|
|
|
|
|
|||||||||||