ஆக்கம் பேசாலைதாஸ்

                          

நினைவில் நிற்கும் ஆசான்கள்
                                         அமரர் டயஸ் மாஸ்டர்தாஸ்
 
 நினைவில் நிற்கும் ஆசான்கள் வரிசையில் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அமரர் டயஸ் மாஸ்டர் ( நீ.அலோசியஸ்.டயஸ்) எங்கள்)   ஊரிலே பொதுவாக எல்லோருக்கும் ஒரு பட்டம் உண்டு . குருஸ் டயஸ் பீரிஸ் குலாஸ் பச்சேக் துரம் இப்படி பல உண்டு . இதனை கோத்திரம்  என்றும் சொல்வார்கள ஒவ்வொரு கோத்திரத்திலும் அந்த பட்டத்தை பிரதிபலிக்கும் ஒரு ஆசிரியர் இருப்பார் . உதாரணம் துரம் மாஸ்டர் என்றால் அந்த பட்டத்தில் வேறு ஒருவர் இருந்தாலும் குறிக்கப்பட்ட நபரே அந்த பட்டத்தால் அழைக்கப்படுவார்கள் . துரம் மாஸ்டர ் பீரிஸ்மாஸ்டர் பச்சேக்மாஸ்டர் இவ்வாரு அமையும். . இவ்வாறு டயஸ்மாஸ்டர் அந்த டயஸ் பரம்பரையின் முதல் ஆசானான் ஆனவர். . வெள்ளை மனம்  கொண்ட பிள்ளை உள்ளம் அவருக்கு .   அவர் உள்ளம் மட்டும் வெள்ளை  இல்லை அவர்  அணியும் கூட வெளிரென்ற வெண்ணிறாடை
! வெள்ளை நீண்ட கால்சட்டை வெள்ளை சேட் இப்படித்தான அவரை எப்பொழுதும் பார்க்கலாம் .
                                          எங்கள் கிராமத்திலே ஆங்கில வாடை வீசுகின்றது என்றால் அது டயஸ் மாஸ்டர் தான் ! தவறாது அவருக்கென்று Sunday,   Daily Mirrorபோன்ற பத்திரிகை எம் ஊருக்கு வரும் . எப்பொழு தும் ஆங்கில வார்த்தைகளே அதிகம் உச்சரிப்பார் ! இப்படிப்பட்ட ஒருவர் எம் ஊரில ே வாழ்ந்து மறைந்தார் என்பது சுவாரசியமான விடையம்!     சொத்து பத்த நிறையக்கொண்ட ஒரு தம்பதிகளுக்கு ஒரேயொரு ஆண்மகனாக பிறந்தவர் ஆனால் செல்வச்செருக்கில்லா உத்தமமான மகன் . உண்மையில் அவர் சொத்துக்களைவிட தனது ஆசிரியர் தொழிலை உன்னதமாக கொண்டவர் . இதற்கு சான்றுகூட உண்டு. 1977 காலகட்டட்தில் ஆட்சிக்குவந்த சுதந்திரக் கட்சி காணி உச்சவரம்புச்சட்டத்தை அமுல்படுத்தியது . அளவுக்கு மீறி சொத்துவைத்திருப்பவர்களது அரசபதவி பறிபோகும் என்ற வதந்தியும் அப்போது உலாவியது ! தனது பத வயை காப்பாற்ற தனது வாழ்நாளிலே தேட முடியாத தனது காணிகளை அரசாங்கத்திற்கு எழுதிக்கொடுத்த
ஒரு உண்மை மனிதன்  ன் ! இந்த சட்டத்தை அமுலாகிய பிரதமமந்திரிக்கு இன்னமும் அத்தனாகல தொகுதியில் ஏகப்பட்ட காணி இருப்பது வேறுவிடையம் !

                                         ஆங்கில பாடத்திலும் சரித்திர பாடத்திலும் அலாதிபிரியம் கொண்டவர் ! எல்லோரும் ஆங்கிலம் கற்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் . ஆங்கிலம் தெரியாதவன் அரைமனிதன் என்று அடி கடி சொல்லுவார் . எனக்கு சிறிதளவேனுமஆங்கிலம் தெரியும் என்றால் அது அவர் எனக்குத்தந்த அறிவுப்பிச்சை ! சரித்திரபாடத்திலும் பிரியம் கொண்டவர் அவர் சரித்திரபாடம் படிப்பிக்கும் போது சுவைபட படிப்பிப் பார் . அவர் அன்று எனக்குத்தந்த ஊக்கம்தான் பிந்நாளிலே நான் பல்கலைகழகத்திலே சரித்திரம் அரசறிவியல்பாடத்திலே படிக்கத்தூண்டியது ! அது என்னை லண்டன் பல்கலைகழகம் வரை குடும்பத்தோடு துரத்தியது!

                                             இவரது Role Model அதாவது இவர் பின்பற்றுபவர் இலங்கைபிரதமராக இருந்த டட்லி சேனநாயக ! அவரைப்பற்றித்தான் அதிகம் பேசுவார் கதைப்பார் . தான் கதைப்பது கேட்பவருக்கு பிடிக்குமோபிடிக்காதோ என்ற கவலை அவருக்கு கிடையாது இதானல் அவரது பேச்சுக்களை சிலர் கேட்பது பிடிக்காது . அவரது சம்பாசணையில் சரித்திரம் புதையுண்டிருப்பது யாருக்கு புரியும் ? கடவுள் படைத்த ஒவ்வொருவரும் விசித்திரமானவர்கள் என்பது டயஸ் மாஸ்டரின் நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போதுபுரிகின்றது ! உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா ?அடுத்த நினைவலைகள் அலைமோதும் போது உங்களை மீண்டும் சந்திப்பேன் .
                        நேசமுடன் பேசாலைதாஸ்

January 23th, 08
ஆசிரியர் அமரர் சி.அ.துரம் ஓர் நினைவுக்
கண்ணோட்டம்

அமரர் டயஸ் மாஸ்டர்
தாஸ்
• read more
 
September 12th, 08
Consectetuer adipis cing elit sed diam laoreet dolore magna aliquam erat volutpat. Ut wisi enim ad minim veniamuis
• read more
 
 
     
 
Dabarera.com © 2008 PESALAI.COM. Harvardwebdesign.com All rights reserved